செவ்வாய், 17 ஜனவரி, 2017

சாலை

இலைகளை உதிர்த்து
தயாராகிறது தியானத்திற்கு
சாலை மரங்கள்.

சாலை

உதிரும்  பூக்கள்
அழகாய்த் தெரியும்
நில மகள்.

சாலை

இலைகளை உதிர்த்து
மூடுகிறது மரம்
சாலையின் நிர்வாணம்.

சாலை

யாருமற்ற நள்ளிரவில்
படுத்து உறங்குகிறது
தனியாய் தார்சாலை.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு

மறக்கச் செய்தது நம்மை
பணத்தட்டுப்பாடு விவசாயிமரணம்
ஜல்லிக்கட்டு விவாதம்.

பட்டிமன்றம் நடத்தலாம்
மாடுகளா அரசியல்வாதிகளா
யார் அதிகம் மோதிக்கொள்வது?

தினம் நடக்கிறது
நீதி மன்றத்தில் வாய்தா
வாய்யில்லா ஜீவனுக்கு.

அடைக்கல லிங்கம்
ஆட்சியாளர்களுக்கு
பீட்டா அமைப்பு.

மிரளும் மாடுகள்
பாவம் எதிரி
பசுதோல் போர்த்திய புலி.

துள்ளும் காளை
ஒருகால் அறிந்திருக்குமோ
தன் மைய அரசியல்.


வியாழன், 5 ஜனவரி, 2017

கள்ளி

அடி கள்ளி
உன் கோலத்தில்
சிக்கிக் கொண்டது
புள்ளிகள் மட்டுமா...
நானும்தான் போ.

விவசாயி

வாடிய பயிர்
வாடினார் வள்ளலார்
வாழ்வை முடித்தான் விவசாயி

செவ்வாய், 3 ஜனவரி, 2017

திறந்திருக்கு

திணறும் மக்கள் கூட்டம்
கேட்டால் சொல்கிறார்கள்
திறந்திருக்கு ஏ.டி.எம்

மகிழ்ச்சி

அரசை நினைத்து மகிழ்ச்சி
சொல்ல முடியவில்லை
வெளியில் வயிற்றெரிச்சல்

பழக்கம்

பழகி மறுத்துப் போனது
நாளும் எல்லாம்
பாவம் தமிழன்