இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
செவ்வாய், 9 மே, 2017
விசாரணை
உண்மை வெளி வரும் தீர
விசாரிக்க பணம் என்றால்
பிணமும் வாய்த்திறக்கும்.
பூவாய்
பூவாய் மாறியது
ஒரு கணம்
பட்டாம்பூச்சி அமர்ந்த விரல்.
அம்மா
மகிழ்ச்சி அடைகிறாள்
தோற்றுவிட்டு
குழந்தைகளிடம் அம்மா.
அழகில்
உன் அழகில் மயங்கி
வந்தால் உண்டு இந்திரன்
நல்லோர் பொருட்டு பெய்யும் மழை
நடனம்
வாடி வதந்குகிறோம்
வருவானா வருண பகவான்
சியர்ஸ் கேர்ள்ஸ் நடனம்.
தேடல்
கிடைக்குமா தேடி
பார்க்கிறான் எதிர்
வீட்டில் அவள்.
தோகை
சேமிக்க உதவிடும்
மயில் தோகை
பால்ய நினைவுகள்.
மேகம்
திரளும் கரு மேகம்
கையெடுத்து வணங்குகிறான்
வர வேண்டும் மழை.
பயணம்
பயணச்சீட்டில்லா பயணம்
போகும் சுகமாக
எருமை மேல் கருங்குருவி.
தவளை
வானில் இடி மேளம்
மின்னல் பெண் நடனம்
அழகாய் பாடும் தவளை.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)