சனி, 17 ஜூன், 2017

குயில் ஓசை

எவ்வளவு இதம்
எல்லாம் மறந்துபோகும்
மழையில் வெயில்

காலம் கலிகாலம்
புல்லாங்குழல் கொண்டு
டிரம்ஸ் வாசிக்கிறான் கண்ணன்

கெட்டிமேளம் கெட்டிமேளம்
ஒலித்த கல்யாணத்தில்
முறிந்தது காதல்

இறை வணக்கக் கூடம்
சீரிய அறிவுரைகள்
கேட்கிறான் குயில் ஓசை


புதன், 14 ஜூன், 2017

கவிக்கோ

சொல்லிவிட்டு செய்
இது என்ன வடிவம்
மூச்சைநிறுத்திபடுத்திருக்கும் கவி

நன்றாய் பார்த்துச் சொல்லுங்கள்
ஆலாபனையை ரசித்திருப்பான்
பித்தன் அவன்

எந்த சிலைக்கு
கண் திறக்க கண்
மூடினான் அவன்

யாரேனும் சொல்லுங்கள்
எழுப்பி அவனைப் பார்க்க
கவிதா ரசிகன் வந்திருக்கிறேன்

கவிக்கோவிற்கு அஞ்சலி

தீ

பற்றி எரியும் தீ
ரொம்பவே பிடிக்கிறது
ஏழையின் குடிசை

மொட்டை மரம்
இலையுதிர் காலம்
ஒன்றுமில்லை வெறுமை

பல்லி

139.          ஏழைச் சிறுமி
ஏக்கத்துடன் பார்க்கும்
பால் நிலா

நீர் கொண்ட மேகம்
மெல்ல நகர்கிறது
 
வனத்திடை களிறு

வானில் மழை மேகம்
அழகாய்த் தெரிகிறது
கருப்பு வெள்ளை ஓவியம்

கதவு இடுக்கில் விரல் நசுங்க
கீழ் விழுந்து துள்ளும்
பல்லியின் வால்


கொளுத்தும் வெயில்
ஒன்றும் கவலை இல்லை
ஏணி ஏறி தொடலாம் சூரியன்

திங்கள், 29 மே, 2017

கட்டு

தாயைக் கண்டு
வேகமாய் வரும் குழந்தை
இழுத்து கட்டு கன்றுக்குட்டி

கல்

பழம் பார்த்து
குறி வைத்து எறிய
கீழே விழுந்தது கல்


சீதா கல்யாணம் செய்து
கண்ணீர் துடைக்கும் குருக்கள்
மகள் கல்யாணம் எண்ணி

சிறுநீர்

குளம்படிச் சத்தம்
காது பிளக்கிறது
மாட்டிறைச்சி தடை சட்டம்
Top of Form


வறண்டு கிடக்கும் அணை
மனம் பொறுக்கவில்லை
கழித்தான் சிறுநீர்

அடிமாட்டு விலையில் வாழ்க்கை
மூடி மறைக்கும் அரசு
மாட்டிறைச்சி தடை

நிழல்

புத்தர் சிலை நிழல்
உதவி செய்ய
இளைப்பாறும்எறும்புகள்


எல்லா கல்லுக்கும்
பழம் எதிர்பார்க்க விழும்
சில நேரங்களில் இலை

சனி, 27 மே, 2017

ஒற்றைச் சொல்

வெயில் மழை
மழை வெயில்
இல்லாமல் இல்லை கவிதை

காற்சிலம்பு கையில்
ஏந்தினள் கண்ணகி
கனலில் தீய்ந்தது மதுரை
Bottom of Form



ஒற்றைச் சொல்
வேண்டி தவிக்கிறது
ஒரு பெருங்கவிதை

நீட் தேர்வு

நட்சத்திரக் கோலம்
அழகாய் வரைய
வானமானது தரை

பெண்ணே என அழைத்தேன் 
வெட்கம் தொற்றிக் கொண்டது
ஓடி ஒளியும் நிலா

வந்தால் போதும் இந்த
கவிகளின் தொல்லை
மேகத்தில் மறையும் நிலா


புதிய காலனி ஆதிக்கம்
பல்வேறு வகை வினாத்தாள்
நீட் தேர்வு

உனக்கென்ன அழகரே
பச்சை பட்டு தங்கக் குதிரை
 
என் பிழைப்பே கஷ்டம்