கிடைக்குமா தேடி
பார்க்கிறான் எதிர்
வீட்டில் அவள்.
பார்க்கிறான் எதிர்
வீட்டில் அவள்.
சேமிக்க உதவிடும்
மயில் தோகை
பால்ய நினைவுகள்.
மயில் தோகை
பால்ய நினைவுகள்.
திரளும் கரு மேகம்
கையெடுத்து வணங்குகிறான்
வர வேண்டும் மழை.
கையெடுத்து வணங்குகிறான்
வர வேண்டும் மழை.
பயணச்சீட்டில்லா பயணம்
போகும் சுகமாக
எருமை மேல் கருங்குருவி.
போகும் சுகமாக
எருமை மேல் கருங்குருவி.
வானில் இடி மேளம்
மின்னல் பெண் நடனம்
அழகாய் பாடும் தவளை.
மின்னல் பெண் நடனம்
அழகாய் பாடும் தவளை.
பார்ப்பவர் மனங்களில் பட்டில்
அழகாய் அழகர் அவர்
மனதில் வரண்ட ஆறு.
அழகாய் அழகர் அவர்
மனதில் வரண்ட ஆறு.
தண்ணீர் இல்லை
யார் சொன்னா கேட்பார்
ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.
யார் சொன்னா கேட்பார்
ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.
உழைத்து
களைத்தான்
வலி முழுவதையும்
எழுதிக்
கொண்டது கவிதை.
திரண்டது
மக்கள் கூட்டம்
காணாது திரும்பும்
வைகைப் புனல்.
காலங் காலமாய்
ஒற்றைக்
கால் நடனம்
கண்டு கொள்ளாத
பக்தர்.
வேகமாய்
புறப்பட்டார் அழகர்
வெயிலுக்கு
முன் போய்
திரும்ப
வேண்டும் வைகை.
பழக்க தோஷம்
வீட்டில்
அழைத்தான் அரசியல்வாதி
மனைவிமார்களே!
ஆடாத ஆட்டமில்லை
ஆடவே இல்லை
இப்போ
தானாய் ஆடுகிறது
தலை.
ஆசையாய்
எடுத்தான்
தங்கச்சங்கிலி
போட்டு
பிடித்தனர்
இரும்பு சங்கிலி.
வண்ணச் சீரடி
மண்மகள்
அறிந்திலள்
விபரீதமானது
சிலம்பு.
சிலையாய்
நிற்க
கண்ணகி கையில்
வீணாய் சிலம்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக