பிறந்த
ஒரு
மாதத்திற்குள்
எதிர்பாரா
விபத்தில்
அப்பா இறந்துபோக
தரித்திரம்...
அதிர்ஷ்டமில்லா
பொண்ணு ஆனாள்
உற்றார் உறவினர்
எலலாருக்கும்.
பள்ளிக்கூடத்தில்
எல்லாவற்றிக்கும்
முதன்மையாய்
சற்றே
துடுக்காய்
பேசியதால்
வாயாடியானாள்...
ஆசிரியர்
மாணவர் என்ற
பேதமேதுமின்றி.
வளர்ந்து
பெரியவளானதும்
மணமுடிக்கையில்
அவனது
மனைவி என்றே
அடையாளப்படுத்தப்பட்டாள்
ஊராரால்.
பிள்ளைகள்
ரெண்டு
பிறந்த பின்னர்
அவர்களின்
பெயரால்
அம்மா ஆனாள்
காலம் கடந்து
மரணத்துப்
போனாள்
ஓர் நாள்
இறந்த அம்மாவின்
பெயர் அறிய
நினைத்த
பிள்ளைகள்...
தெரிந்துகொள்ள
முடியுமோ?
அவளின் அப்பா
தன் கொள்கைப்
பிடிப்போடு
மகளுக்கு வைத்த
“அஜிதா”
என்ற பெயரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக