திங்கள், 29 மே, 2017

கட்டு

தாயைக் கண்டு
வேகமாய் வரும் குழந்தை
இழுத்து கட்டு கன்றுக்குட்டி

கல்

பழம் பார்த்து
குறி வைத்து எறிய
கீழே விழுந்தது கல்


சீதா கல்யாணம் செய்து
கண்ணீர் துடைக்கும் குருக்கள்
மகள் கல்யாணம் எண்ணி

சிறுநீர்

குளம்படிச் சத்தம்
காது பிளக்கிறது
மாட்டிறைச்சி தடை சட்டம்
Top of Form


வறண்டு கிடக்கும் அணை
மனம் பொறுக்கவில்லை
கழித்தான் சிறுநீர்

அடிமாட்டு விலையில் வாழ்க்கை
மூடி மறைக்கும் அரசு
மாட்டிறைச்சி தடை

நிழல்

புத்தர் சிலை நிழல்
உதவி செய்ய
இளைப்பாறும்எறும்புகள்


எல்லா கல்லுக்கும்
பழம் எதிர்பார்க்க விழும்
சில நேரங்களில் இலை

சனி, 27 மே, 2017

ஒற்றைச் சொல்

வெயில் மழை
மழை வெயில்
இல்லாமல் இல்லை கவிதை

காற்சிலம்பு கையில்
ஏந்தினள் கண்ணகி
கனலில் தீய்ந்தது மதுரை
Bottom of Form



ஒற்றைச் சொல்
வேண்டி தவிக்கிறது
ஒரு பெருங்கவிதை

நீட் தேர்வு

நட்சத்திரக் கோலம்
அழகாய் வரைய
வானமானது தரை

பெண்ணே என அழைத்தேன் 
வெட்கம் தொற்றிக் கொண்டது
ஓடி ஒளியும் நிலா

வந்தால் போதும் இந்த
கவிகளின் தொல்லை
மேகத்தில் மறையும் நிலா


புதிய காலனி ஆதிக்கம்
பல்வேறு வகை வினாத்தாள்
நீட் தேர்வு

உனக்கென்ன அழகரே
பச்சை பட்டு தங்கக் குதிரை
 
என் பிழைப்பே கஷ்டம்


ஓரப்பார்வை

நிரம்பி வழிகிறது
ஆறுகள் எல்லாம்
வெயில்
  
கண்ணாமூச்சி விளையாட்டு 
ஒளிந்து கொள்ள மனமில்லை
மாட்டிக்கொள்கிறேன் குழந்தையிடம்






நீண்டு வளர்ந்த நகங்கள்
மருதாணி இல்லை ரத்தம்
பயங்கரவாதம்

குவி லென்ஸ் குழி லென்ஸ்
எதிலும் தெரியவில்லை
தலையெழுத்து

கிட்டப்பார்வை தூரப்பார்வை
எந்த லென்சும் பயனில்லை
அவள் ஓரப்பார்வை


கடற்கரை

வெந்நீர் பருகாள்
தண்ணீரும் சுடுகிறது
காதலனை நெஞ்சில் சுமக்கிறாள்
         
கருத்தது மேனி
குளித்து முடித்தார்
காயும் வெயில்

அதீத தாகம்
எடுத்து பருகினேன்
கை நிறைய வெயில்

கடற்கரை வெளி
கொட்டிக்கிடக்கிறது
மணலோடு காதலர் பேச்சு

தண்ணீரில் பாட்டு
நன்றாய் வரும் பார்
சுடுமணலில் நடனம்


உபயம்

உபன்யாசப் பண்டிதர்
உரக்கச் சொன்னார்
யாரோட உபதேசமும் பிடிக்காது

நல்ல பாடகர்
கோபத்தில் ஆழ்ந்தார்
யாரும் துதிபாடவில்லை

விழித்தெழும் முன்பே
காத்துக் கிடக்கிறது
அவளுக்கான சமையலறை

இதற்கும் அதற்குமாய்
அளிக்கிறான் வீதி
உபயம் போதை


சிறு தூறல்
பிரவாகம் எடுத்தது
ஓராயிரம் கவிதைகள்


பச்சைத் தமிழன்

ஆடை துறந்தான்
ஆயுதத்தை இழந்தான்
கேரளாவில் சாமியார்

வீசி எறிந்திட 
குரல் எழுப்பி மடிந்தது
குளத்தில் கல்

மழை நீர் வரைய
அழித்தது உடன்
குழந்தையின் கண்ணீர்



மழைக் கவிதை
எழுத வருகிறது
எங்கிருந்தோ மண்வாசனை


வளமான தலைவர்கள்
பச்சைத் தமிழர்கள்
காய்ந்து கிடப்பது மக்கள்

வெட்டுக்கிளி

ஒன்றும் பிடிபடவில்லை
வழிகிறது எல்லாம்
வழுக்கை தலை

கோணல் மாணலாய்
தெரியும் எல்லாம்
நெளியும் பாம்பு

பச்சை நிறம்
வெறுக்கும் மனம்
வெட்டுக் கிளி


எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதில்லை எதுவும்
ஒன்றெனவே எண்ணும் மனம்

சந்தேகம் வரலாம் சீதைக்கு
கல்லாய் கிடந்தவளை
பெண்ணாய் மாற்றிய ராமன்


போதி மரம்

காற்றில் வரும் இசை
நின்ற தலை ஆட்டும்
வேலியில் ஓணான்

எளிதாய் வளையும்
இராம தனுசு
கல்விக் கட்டணம்


கூடி கலையும் மேகம்
காதலர் கண்களில்
போதி மரம்


பொங்கி வழியும்
கடும் கோடையிலும்
நெஞ்சில் காதல்

செவ்வாய், 9 மே, 2017

கொஞ்சம் தேநீரும்...

கிடைக்குமா தேடி
பார்க்கிறான் எதிர்
வீட்டில் அவள்.

சேமிக்க உதவிடும்
மயில் தோகை
பால்ய நினைவுகள்.

திரளும் கரு மேகம்
கையெடுத்து வணங்குகிறான்
வர வேண்டும் மழை.

பயணச்சீட்டில்லா பயணம்
போகும் சுகமாக
எருமை மேல் கருங்குருவி.

வானில் இடி மேளம்
மின்னல் பெண் நடனம்
அழகாய் பாடும் தவளை.

பார்ப்பவர் மனங்களில் பட்டில்
அழகாய் அழகர் அவர்
மனதில் வரண்ட ஆறு.

தண்ணீர் இல்லை
யார் சொன்னா கேட்பார்
ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.

உழைத்து களைத்தான்
வலி முழுவதையும்
எழுதிக் கொண்டது கவிதை.
  
திரண்டது மக்கள் கூட்டம்
காணாது திரும்பும்
வைகைப் புனல்.

காலங் காலமாய்
ஒற்றைக் கால் நடனம்
கண்டு கொள்ளாத பக்தர்.

வேகமாய் புறப்பட்டார் அழகர்
வெயிலுக்கு முன் போய்
திரும்ப வேண்டும் வைகை.

பழக்க தோஷம்
வீட்டில் அழைத்தான் அரசியல்வாதி
மனைவிமார்களே!

ஆடாத ஆட்டமில்லை
ஆடவே இல்லை இப்போ
தானாய் ஆடுகிறது தலை.

ஆசையாய் எடுத்தான்
தங்கச்சங்கிலி போட்டு
பிடித்தனர் இரும்பு சங்கிலி.

வண்ணச் சீரடி
மண்மகள் அறிந்திலள்
விபரீதமானது சிலம்பு.

சிலையாய் நிற்க
கண்ணகி கையில்

வீணாய் சிலம்பு.