செவ்வாய், 31 ஜனவரி, 2017

தேர்வு

வெள்ளை நிறச் சட்டை
நீலச் சாயம் பூசிக்கொண்டது
கடைசி தேர்வு நாள்.

தேர்வு

துள்ளல் குதியாட்டம்
அளவில்லா மகிழ்ச்சி
தேர்வு முடிந்தது.

கோடை

இயல்பாய் நடக்கிறது
மாடு மேய்க்கும் இடத்தில்
கூட்டல் கழித்தல் கணக்கு.

கோடை

கோடை வந்தும் சலிப்பு
முடியவில்லை தொடர்கிறது
கணினி வகுப்பு

கோடை

சித்திரையோ தையோ மனிதருக்கு
கடும் கோடை வந்தால்தான்
கல்யாணம் கழுதைக்கு.

பட்டு

செத்துக் கொடுக்கும்சீதக்காதி
புடவையாய்
பட்டுப்பூச்சி

பொம்மை

தேடி எடுத்தாள்
கையில்லா பொம்மை
அடிக்கும் அப்பா நினைவில்.

பொம்மை

ஆறுதல் சொன்னாள்
மாற்றுத்திறன் குழந்தை
கை ஒடிந்த பொம்மை.

பொம்மை

பொம்மை வாங்கவும் வேறுபாடு
அவனுக்கு குதிரை
அவளுக்கு மரபாச்சி.

பொம்மை

ஒவ்வொரு இரவிலும் நினைக்கிறாள்
முதிர் கன்னி
பொம்மை கல்யாணம்.

பொம்மை

அழகழகாய் பொம்மைகள்
வாங்க முடியவில்லை
குழந்தைகள் இல்லா வீடு.

ஆசை

இருந்திருக்கும் ஆசை
மனதின் ஓரத்தில் புத்தனுக்கு
சொல்வதைக்கேட்க வேண்டுமென்று 

நிலா

ஓடி மறைகிறது
மேகத்துக்குள் நிலா
அண்ணாந்து பார்க்கும் குழந்தை

பொம்மை

வியாபாரியின் பேச்சு
கேட்டு கைதட்டுகிறது
கடை பொம்மை.








திங்கள், 30 ஜனவரி, 2017

வலி

எரித்து சாம்பலானது
மீனவர் குப்பங்கள்
எருது நோய் அறியுமோ காக்(கை)கி.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

அலை

கொஞ்சமும் பயமில்லை
144 தடை உத்தரவு
ஆர்பரித்தெழும் கடலலை.

உழவு

உழ வேண்டும் நாளை
பேசினான் மனசுக்குள்
பெய்யும் மழை.

தடை

பொருந்துமா அலைகரங்களுக்கு
கேட்கும்  மெரினா
144 தடை உத்தரவு.

விசுவாசம்

காலம் தோறும்
ராஜாவை மீறிய ராஜ விசுவாசிகள்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

காக்கி

நீங்கியது காளை
சேர்ந்தது காக்கி
ஆபத்தான விலங்கு பட்டியல்

வியாழன், 26 ஜனவரி, 2017

மெரினா

மெரினாவை நினைக்கையில்
பீறிட்டெழுகிறது
அழுகை சப்தம்.

பொறுமை

காணாமல் போனது
போராட்டக்காரர்கள் பொறுமை
போலீஸ்காரர்களுக்கு.

வேலி

அன்றும் நடந்திருக்கும்
நடக்காமலா எழுதியிருப்பான்
வேலியே பயிரை மேய்ந்தார்போல.

கலை

கற்றுக்கொள்ளுவார்கள் இனி
கொடிக்கும் இளைஞர்கள்
திருப்பி பிடிக்கும் கலை.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

கொம்பு

முகநூல் படிப்பு
மூண்டது பெரும் புரட்சி
தமிழகத்தில் ஜல்லிகட்டு.

கொம்பு

கரைவந்த அலைகள்
கண்டு திரும்புகிறது
கூடும் ஜல்லிகட்டு கூட்டம்.

கொம்பு

முட்டும் மாடுகள்
போராட்டம் நடக்கிறது
அமைதியாய் அறவழியில்.

கொம்பு

மாடுகள் அஃறிணை பொதுபெயர்
அதன்பேரால் அரசியல்
இவர்கள் எத்திணை சொல்வீர்.

கொம்பு

கொம்புளதற்கு ஐந்து
குதிரைக்கோ பத்து முழம்
ஆட்சியாளர்கட்கு எத்தனை காலம்சொல்.

ஜல்லிகட்டு

கலை கட்டும் ஜல்லிகட்டு
மோதலில் ஆடுகிறது
மத்திய- மாநில அரசு கட்டில்.

கொம்பு

பதவி கொம்புகள்
முறிந்து விழுகிறது
முட்டும் ஜல்லிகட்டு.

தமிழன்

தமிழனுக்கு
காவிரியா
தண்ணியில்லே...
மீனவரா
மீனுமில்லே படகுமில்லே...
விவசாயியா
வாழ்வே இல்லே...
ஜல்லிகட்டு
தெம்பா முட்டுதில்லே....

செவ்வாய், 17 ஜனவரி, 2017

உறவு

உறவு முறிந்தது
சிரித்தபடி இருக்கிறார்கள்
புகைப்படத்தில்.

சாலை

வானவீதி சூரியன்
ஊடுருவி பார்க்கிறான்
மர ஜன்னல் வழி நிலமகள்.

சாலை

தனியாய் போவோர்க்கு
துணையாய் ஆனது
மரங்களின் சலசலப்பு.

சாலை

பட்டாம்பூச்சியுடன் சண்டை
வெளிநடப்பு செய்தது
மரங்களைவிட்டு பூக்கள்.

சாலை

இலைகளை உதிர்த்து
தயாராகிறது தியானத்திற்கு
சாலை மரங்கள்.

சாலை

உதிரும்  பூக்கள்
அழகாய்த் தெரியும்
நில மகள்.

சாலை

இலைகளை உதிர்த்து
மூடுகிறது மரம்
சாலையின் நிர்வாணம்.

சாலை

யாருமற்ற நள்ளிரவில்
படுத்து உறங்குகிறது
தனியாய் தார்சாலை.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு

மறக்கச் செய்தது நம்மை
பணத்தட்டுப்பாடு விவசாயிமரணம்
ஜல்லிக்கட்டு விவாதம்.

பட்டிமன்றம் நடத்தலாம்
மாடுகளா அரசியல்வாதிகளா
யார் அதிகம் மோதிக்கொள்வது?

தினம் நடக்கிறது
நீதி மன்றத்தில் வாய்தா
வாய்யில்லா ஜீவனுக்கு.

அடைக்கல லிங்கம்
ஆட்சியாளர்களுக்கு
பீட்டா அமைப்பு.

மிரளும் மாடுகள்
பாவம் எதிரி
பசுதோல் போர்த்திய புலி.

துள்ளும் காளை
ஒருகால் அறிந்திருக்குமோ
தன் மைய அரசியல்.


வியாழன், 5 ஜனவரி, 2017

கள்ளி

அடி கள்ளி
உன் கோலத்தில்
சிக்கிக் கொண்டது
புள்ளிகள் மட்டுமா...
நானும்தான் போ.

விவசாயி

வாடிய பயிர்
வாடினார் வள்ளலார்
வாழ்வை முடித்தான் விவசாயி

செவ்வாய், 3 ஜனவரி, 2017

திறந்திருக்கு

திணறும் மக்கள் கூட்டம்
கேட்டால் சொல்கிறார்கள்
திறந்திருக்கு ஏ.டி.எம்

மகிழ்ச்சி

அரசை நினைத்து மகிழ்ச்சி
சொல்ல முடியவில்லை
வெளியில் வயிற்றெரிச்சல்

பழக்கம்

பழகி மறுத்துப் போனது
நாளும் எல்லாம்
பாவம் தமிழன்