வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஆன்மா

மனம் ஆன்மா புத்தி
எல்லாம் ஒன்றே ஒன்றே
ஊழல் ஊழல் ஊழல்.

கண்

முக்கண்ணனுக்கு இன்று
மூன்றாம் கண்ணும் மூளி
பிரதமர் சிலை திறப்பு.

கண்

உண்மை பொய்யில்லை
இவர் திறக்க பார்ப்பாரா
கடவுளுக்கு கண் இல்லை.

ஆசை

ஆசை துறந்தால் காடு போ
அத்தனையும் ஆசைபடு
காட்டையும் அழிக்கலாம்.

யோகி

காடுகள் அழித்தார்
பொருள் புரிந்த யோகி
தூய்மை இந்தியா.

கலை

காடுகளை அழிப்போம்
பிரதமரை அழைப்போம்
வாழும் கலை அறிவோம்.

புதன், 22 பிப்ரவரி, 2017

எலி

உள்ளே யாருமில்லை
சொல்ல முடியவில்லை
துள்ளி குதித்தோடும் எலி

வீடு

வீட்டுக்குள் வீடு
கட்டி முடித்தது
சிலந்திக் கூடு.

பூனை

குழந்தையின் அழுகுரல்
அமைதி குலைகிறது
பூனையின் மூலம்.

முகம்

எதுவும் நிரந்தரமில்லை
நேரத்திற்கு ஒவ்வொன்று
எல்லாம் பொய் முகங்கள்.

முகம்

நெஞ்சில் நிழலாடுகிறது
உன்நினைவு வரும்பொழுது
கள்ளமில்லா பிள்ளை முகம்.

வீடு

பூட்டிக் கிடக்கும் வீடு
உள் சென்று திரும்புகிறது
எலியை கண்ட பூனை

வீடு

யாருமில்லா வீடு
கவலை ஏதுமில்லை
பூத்து சிரிக்கும் பூதொட்டி.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

நிலா

தேடி அலைகிறது
வான் வெளி நிலா
கண்ணுக்கு மை டப்பி.

நிலா

பேதம் பார்க்கவில்லை
எல்லாரோடும் பயணிக்கிறது
இரவில் வான் நிலா.

சனி, 18 பிப்ரவரி, 2017

பதவி

போக முடியாமல் தடுத்தது
சின்னம்மாவின் மரணம்
சட்ட மன்ற உறுப்பினர் பதவி

காலம்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
காலம் மாற்றம் கண்டது
ஆற்றில் உள்ளதையும் அள்ளிப் போடு

இலைமேல்

இனிமேல் பாருங்கள்
இலை மேல் தண்ணீராய்
தத்தளிக்கும் தமிழகம்.

நாற்காலி

இனிதே நடந்தேறியது
யாரும் எதிர்பாராவிதமாய்
நாற்காலி சண்டை.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

காதல்

பூவிலோ பொன்னிலோ இல்லை
தூய அன்பிலே வளருது
உண்மைக் காதல்.

காதலர் தினம்

முறையாய் கொண்டாடுகையில்
ஒவ்வொரு நாளும்
காதலர் தினம் தான்.

மனம்

சசிகலா பறி கொடுத்த
முதல்வர் பதவி போல்
என் மனம் உன்னிடம் அன்பே.

பெயர்

எனக்கான கவிதை
வேறெதுவாகும்
உன் பெயர்தான் அன்பே.

சனி, 11 பிப்ரவரி, 2017

சிரிப்பு

தாங்கிக்கொள்ளவில்லை
இருவரின் சிரிப்பு
சிரிப்பாய் சிரிக்குது நாடு.

ஆட்சி

அலங்கா நல்லூரில் அண்டா
ஆளுநர் மாளிகையில்
அடக்கினால் ஆட்சி.

வுாசம்

மதுவுக்கே மயக்கம்
தந்திருக்கிறது
பன்னீர் (சக)வாசம்.

சிரிப்பு

சிரிப்பால் பறி போகுது
மகாபாரத காலந்தொட்டு
நடக்கும் ஆட்சி.

புதன், 1 பிப்ரவரி, 2017

பொம்மை

கிழிந்த கால்சட்டை
அணிந்த காவல்பொம்மை
விவசாயின் அவலம்.

சிலை

கட்டுக்கடங்காத வன்முறை
வேடிக்கை பார்க்கும்
புன்னகைத்தபடி புத்தர்சிலை.