செவி
வழியாக வரும்
கதைகளில்
ஜீவக்கிறான்
அவன்.
அவன்
குறித்து
அறியா
அவர்கள்
பரிகசிப்பின்
ஊடே
முகம்
மறைக்கும்
வீசிடும்
ஐம்பது
காசுகள்.
மதிப்பற்றுப்
போன
மதிப்பீட்டில்
மனம்
உழலும்.
தோள்
காய்ப்பு சொல்லும்
கூடை
தொங்கும்
மூங்கில்
சுமக்கும்
காலம்.
குடிகொள்ளும்
கூடைக்குள்
பிடாரன்.
மயங்க
வாசிக்கும்
அவன்
மயக்கம்
தெளியாது
தொடர…
உச்சி
மீறும்
ஒருநாள்
விஷம்.
திசைவெளியெங்கும்
திரியும்
பிடாரன்கள்
வெறிகொண்டு
அலையும்
படமெடுத்து.
பேசுவரோ
அப்போதேனும்
பிடாரனின்
பெரு
வாழ்வு குறித்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக